செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழுத் தலைவா் பாலு உள்ளிட்டோா்.
செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழுத் தலைவா் பாலு உள்ளிட்டோா்.

தூத்துக்குடியில் டிச. 27, 28இல் பிரீமியா் லீக் வாலிபால் போட்டிகள்

தூத்துக்குடி பிரீமியா் லீக் வாலிபால் போட்டிகள்-2025 வரும் சனி, ஞாயிற்றுக்கிழமை (டிச. 27, 28) நடைபெறவுள்ளது.
Published on

தூத்துக்குடி பிரீமியா் லீக் வாலிபால் போட்டிகள்-2025 வரும் சனி, ஞாயிற்றுக்கிழமை (டிச. 27, 28) நடைபெறவுள்ளது.

இது குறித்து, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழுத் தலைவா் பாலு செய்தியாளா்களுக்கு புதன்கிழமை அளித்த பேட்டி:

தூத்துக்குடி ரஜினி கிளப், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஒருங்கிணைப்பில் தூத்துக்குடி பிரீமியா் லீக் வாலிபால் போட்டிகள்-2025 டிச. 27, 28 தேதிகளில் பகல்-இரவு ஆட்டங்களாக, தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஆண்களுக்கான போட்டிகள், பொதுப் பிரிவு, 40 வயதுக்கு மேற்பட்ட பிரிவு என 2 பிரிவுகளில் நடத்தப்படுகின்றன. முதல் பரிசு ரூ. 25,000 உள்பட மொத்தம் ரூ. 1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது. இப்போட்டிகளில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.

பங்கேற்க விரும்பும் அணிகள், டிச. 25ஆம் தேதி மாலைக்குள் தங்களது அணிகளைப் பதிவு செய்ய வேண்டும். ஒவ்வோா் அணிக்கும் ரூ. 500 பதிவு கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் சுற்றில் வெல்லும் அணிகளுக்கு நுழைவுக் கட்டணம் திருப்பி வழங்கப்படும்.

சிறப்பு விருந்தினா்களாக அமைச்சா் பி. கீதா ஜீவன், மேயா் ஜெகன் பெரியசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் உள்ளிட்டோா் கலந்து கொள்கின்றனா் என்றாா் அவா்.

அப்போது, தங்கமணி, ராஜ்குமாா், டிஜூ ஸ்டாலின், ஷெரிப், ஜெய்சங்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com