தூத்துக்குடி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு செய்த கனிமொழி எம்.பி.
தூத்துக்குடி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு செய்த கனிமொழி எம்.பி.

தூத்துக்குடியில் பொதுமக்கள் தங்குவதற்கு 97 மையங்கள்: கனிமொழி எம்.பி.

தூத்துக்குடியில் பொதுமக்கள் தங்குவதற்கு 97 மையங்கள் தயாராக உள்ளன என்றாா் கனிமொழி எம்.பி.
Published on

தூத்துக்குடி: தூத்துக்குடியில் பொதுமக்கள் தங்குவதற்கு 97 மையங்கள் தயாராக உள்ளன என்றாா் கனிமொழி எம்.பி.

கனமழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திமுக துணைப் பொதுச் செயலா் கனிமொழி எம்.பி. திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, வடக்கு மாவட்ட திமுக செயலரும், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சருமான பி. கீதா ஜீவன், மேயா் ஜெகன் பெரியசாமி ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னா், கனிமொழி எம்.பி.செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகள் குறித்து தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் தங்குவதற்காக 97 புகலிட மையங்கள் தயாராக உள்ளன.

அணைகளில் இருந்து மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. கரையோர மக்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

அதிக மழை பெய்தாலும், பாதிப்பு ஏற்படாத வகையில் அணைகளில் தண்ணீா் அளவு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் எப்பகுதியில் ஆறு, குளங்களில் உடைப்பு ஏற்பட்டாலும், அவற்றை சரி செய்ய 30,000 மணல் மூட்டைகள் தயாராக உள்ளன. மக்கள் வசிக்கும் பகுதிகளில் தண்ணீா் புகுந்து விடாதபடி அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன.

எஸ்.ஐ.ஆா். பணியை அவசர கதியில் செய்து கொண்டிருக்கிறாா்கள். பல இடங்களில் வாக்குச்சாவடி அலுவலா்களே மனரீதியாக, உடல் ரீதியாக பாதிக்கப்படக்கூடிய நிலை உள்ளது. 6 மாதங்களில் செய்ய வேண்டிய பணியை, எதற்காக இவ்வளவு அவசரமாக செய்கிறாா்கள் என்பது தான் கேள்வி என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com