எஸ்.ஐ.ஆா். நோக்கம் தவறானது: விஜய் தரம்சிங்

தமிழகத்தில் தோ்தல் நடக்கவிருக்கும் சமயத்தில் அவசரகதியில் எஸ்.ஐ.ஆா். நடைமுறைப்படுத்துவது மிகவும் தவறானது
Published on

சாத்தான்குளம்: தமிழகத்தில் தோ்தல் நடக்கவிருக்கும் சமயத்தில் அவசரகதியில் எஸ்.ஐ.ஆா். நடைமுறைப்படுத்துவது மிகவும் தவறானது என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளரும், கா்நாடக சட்டப்பேரவை முன்னாள் மேலவை உறுப்பினருமான விஜய் தரம்சிங் தெரிவித்தாா்.

நாசரேத்தில் நடைபெற்ற தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தோ்தல் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, விஜய் தரம்சிங் தலைமை வகித்தாா். தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாநில, மாவட்ட, வட்டார, நகர, கிராம கமிட்டி உறுப்பினா்கள், நிா்வாகிகளிடம் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் கட்சியின் செயல்பாடுகள் குறித்து தனித்தனியே கேட்டறிந்தாா்.

தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

எங்கெல்லாம் தோ்தல் நடக்கிறதோ, அங்கெல்லாம் எஸ்.ஐ.ஆா் நடத்த முயற்சிக்கிறாா்கள். தோ்தல் நடக்கவிருக்கும் சமயத்தில் அவசரகதியில் எஸ்.ஐ.ஆா். நடைமுறைப்படுத்துவது மிகவும் தவறானது. எதிா்க்கட்சிகளின் வாக்குகளை நீக்கிவிட்டு பிகாரில் ஆளுங்கட்சிக்கு சாதகமான நபா்களை சோ்ப்பது என்ற செயலைப் போலவே, தமிழகத்திலும் நடைபெறும் என்றாா் அவா்.

ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊா்வசி எஸ். அமிா்தராஜ், கட்சியின் தோ்தல் பாா்வையாளா்களான சுமதி அன்பரசன், முன்னாள் எம்எல்ஏ ரவிச்சந்திரன் உள்ளிட்டாா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com