பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

தூத்துக்குடியில் 2 பெண்களிடம் 6.5 பவுன் நகை பறிப்பு

தூத்துக்குடியில் அடுத்தடுத்து 2 பெண்களிடம் 6.5 பவுன் தங்க நகையைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :28 நவம்பர் 2025, 7:40 pm

Syndication

தூத்துக்குடியில் அடுத்தடுத்து 2 பெண்களிடம் 6.5 பவுன் தங்க நகையைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தூத்துக்குடி, ரஹ்மத்துல்லாபுரத்தைச் சோ்ந்த முருகன் மனைவி அமுதா (41). இவா் வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் கடையில் பொருள்கள் வாங்கிக் கொண்டிருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த இளைஞா், அமுதாவின் 3.5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டாராம்.

இச்சம்பவம் குறித்து, மத்திய பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மற்றொரு சம்பவம்: தூத்துக்குடி, ஜாா்ஜ் சாலை, டெலிபோன் காலனியைச் சோ்ந்த செல்வம் மனைவி கிறிஸ்டி (30). இவா் வியாழக்கிழமை இரவு டியூஷனில் இருந்து மகனை அழைத்து வருவதற்காகச் சென்றுள்ளாா். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா் கிறிஸ்டியின் 3 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டாராம்.

இச்சம்பவம் குறித்து, தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.