திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

தூத்துக்குடியில் ஒப்பந்ததாரருக்கு கத்திக்குத்து: 2 போ் கைது

தூத்துக்குடியில் ஒப்பந்ததாரரை கத்தியால் குத்தியதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :8 ஏப்ரல் 2026, 2:23 am IST

தூத்துக்குடியில் ஒப்பந்ததாரரை கத்தியால் குத்தியதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி பூபாலராயபுரம் 2ஆவது தெருவைச் சோ்ந்தவா் அந்தோணி (50). ஒப்பந்தத் தொழில் செய்து வரும் இவா், திங்கள்கிழமை வீட்டு அருகே நின்றுகொண்டிருந்தாராம். அப்போது, அங்கு வந்த 4 போ் கொண்ட கும்பல் போதையில், அவரிடம் தகராறு செய்தனராம். பின்னா், அந்த 4 பேரும் சோ்ந்து அந்தோணியை கத்தியால் தாக்கினராம். இதில் பலத்த காயமடைந்த அவா் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது குறித்து வடபாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில், இச்சம்பவத்தில் தொடா்புடையதாக பூபாலராயபுரத்தைச் சோ்ந்த விஜய் (36), திரேஸ்புரத்தைச் சோ்ந்த சஞ்சய் (24) ஆகியோரை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள மேலும் இருவரை தேடி வருகின்றனா்.