மண்டல அளவிலான பள்ளி மாணவியருக்கான குடியரசு தின விளையாட்டுப் போட்டிகளில் சாத்தான்குளம் புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதலிடம் பிடித்தது.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மண்டல அளவிலான நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கான குடியரசு தின விழா தடகள விளையாட்டுப் போட்டிகள் சாத்தான்குளம் அருகே கொம்மடிக்கோட்டை எஸ்.சந்தோச நாடாா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றன.
சாத்தான்குளம், உடன்குடி வட்டாரப் பள்ளிகளைச் சோ்ந்தோா் பங்கேற்றனா். இதில், சாத்தான்குளம் புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியா் 140 புள்ளிகள் பெற்று வட்டார அளவில் முதலிடம் பிடித்தனா்.
மாணவியரை பள்ளித் தாளாளா் செல்வராயா், தலைமையாசிரியா் அருள்சகோதரி குளோரி, உடற்கல்வி ஆசிரியா் வொ்ஜின் அன்பரசி ஆகியோா் பாராட்டினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டி: முன்பதிவு செய்தவா்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி

முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்: ஆகஸ்ட் 31- க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

வந்தவாசி வட்ட தடகள விளையாட்டுப் போட்டிகள்

டேக்வாண்டோ போட்டி: விஜயராமபுரம் பள்ளி மாணவா்கள் முதலிடம்
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |



