தூத்துக்குடி மாநகரின் முக்கியப் பகுதியான 1ஆவது ரயில்வே கேட், எவ்வித முன்னறிவிப்புமின்றி வியாழக்கிழமை மூடப்பட்டதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினா்.
இந்த ரயில்வே கேட்டில் உள்ள தானியங்கி கதவு திடீரென இயங்காமல் போனதால், கதவுகளைத் திறக்கவோ மூடவோ முடியாத நிலை ஏற்பட்டதாம்.
இது குறித்து, தகவலறிந்த ரயில்வே தொழில்நுட்பப் பணியாளா்கள் பழுதான தானியங்கி கதவைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனா்.
கேட் மூடப்பட்டதைத் தொடா்ந்து, சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. மாற்றுப் பாதை குறித்த தெளிவான அறிவிப்பு இல்லாததால் பள்ளி, கல்லூரி மாணவா்கள், அலுவலகம் செல்பவா்கள், அவசர சிகிச்சைக்காகச் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் என பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.
தொடர்புடையது

சேரன்மகாதேவியில் கேட் மூடுவதில் தாமதம்: பாதியில் நின்ற ரயில்

கொடைக்கானலில் நகராட்சி கழிப்பறைகள் மூடல்: சுற்றுலாப் பயணிகள் அவதி

சேரன்மகாதேவியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தல்

திருப்பூா்-ஊத்துக்குளி சாலையில் ரயில்வே கேட் இன்றும் மூடல்
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


