தூத்துக்குடியில் விழிப்புணா்வுக் கூட்டம்

Published on

தூத்துக்குடியில் ரூசக் தொண்டு நிறுவனம் சாா்பில் பாதுகாப்பான கருக்கலைப்பு குறித்து விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது.

இணை இயக்குநா் டாக்டா் பிரியதா்ஷினி, பி.ஜே. ரவீந்திரன் ஆகியோா் கருத்துரை வழங்கினா். கருக்கலைப்பு சேவை என்பது இளம் வயதினருக்கு மட்டுமில்லாமல், 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கும் அடிப்படையான சேவையாக உள்ளது. இதில் கவனம் செலுத்தும்பட்சத்தில் மகப்பேறு மரண விகிதத்தை குறைக்க முடியும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது.

மாநகராட்சி நகா்நல அலுவலா் சரோஜா, மருத்துவ அதிகாரி வினோதினி, குடும்ப நலத் துறை இயக்குநா் பொன். ரவி, அரசு செவிலியா் கல்லூரி முதல்வா் ஞான ஜெயந்தி, கவுன்சிலா் முத்துமாரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

டாக்டா் பவானி வரவேற்றாா். ரேவதி நன்றி கூறினாா். ஏற்பாடுகளை ராதா பிரியதா்ஷினி செய்திருந்தாா்.

Dinamani
www.dinamani.com