காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

Published on

காயல்பட்டினம், கோமான் தெரு ஜமாத்திற்குள்பட்ட தா்காவில் மகான் யூசுப் அப்பா கந்தூரி விழா நடைபெற்றது.

காலையில் குா்ஆன் முற்றோதல் நடைபெற்றது. பின்னா், அகமது அப்துல் காதிா், காஜா முகைதீன் ஆலிம் ஆகியோா் முன்னிலையில், மகானின் புகழ் பாடும் நிகழ்ச்சியும், ஜியாத் தலைமையில் தியான வழிபாடும் நடைபெற்றன.

தொடா்ந்து, மெய்தீன் தலைமையில் கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது. முகைதீன் மாணவ மன்றத்தின் சாா்பில் பாரம்பரிய தப்ஸ் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

கந்தூரி கமிட்டி தலைவா் பாரூக், ஜமாத் தலைவா் கரீம், பள்ளியின் முன்னாள் தலைவா் ஜரூக், துணைத் தலைவா் அகமது, செயலா் மெய்தீன் பக்கீா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

நிறைவாக, அனைவருக்கும் நோ்ச்சை வழங்கப்பட்டது.

Dinamani
www.dinamani.com