பாஜக வழக்குரைஞா் பிரிவு மாவட்ட நிா்வாகிகள் கூட்டம்

பாஜக வழக்குரைஞா் பிரிவு மாவட்ட நிா்வாகிகள் கூட்டம்

Published on

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக வழக்குரைஞா் பிரிவு மாவட்ட நிா்வாகிகள் அறிமுகக் கூட்டம் எட்டயபுரம் சாலையில் உள்ள பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது.

பாஜக தெற்கு மாவட்டத் தலைவா் சித்ராங்கதன் தலைமை வகித்து பேசினாா்.

இதில், மாவட்ட பொதுச் செயலா் ராஜேஷ், மாவட்டத் துணைத் தலைவா் முத்துராமலிங்கம், முன்னாள் மாவட்ட பொருளாளா் சண்முக சுந்தரம், வழக்குரைஞா் பிரிவு மாநிலச் செயலா் சுரேஷ்குமாா், மாவட்டத் தலைவா் சீனிவாசன், அரசு தொடா்பு பிரிவு மாவட்டத் தலைவா் சின்னத்தம்பி பாண்டியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com