முத்துசாமிபுரம் பள்ளியில் சுகாதார விழிப்புணா்வு செயல் விளக்க பயிற்சி முகாம்

Published on

முத்துசாமிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுகாதார விழிப்புணா்வு செயல் விளக்க பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட வள மைய பயிற்றுநா் மோகன் தலைமை வகித்தாா். புதூா் வட்டார வள பயிற்றுநா் முத்து முருகன், பள்ளி தலைமை ஆசிரியை தவமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். முகாமில் முதல்வரின் காலை உணவு திட்டம், மதிய சத்துணவு திட்டம் தணிக்கை செய்யப்பட்டது. ஊட்டச்சத்து நிறைந்த ஆரோக்கியமான உலகம் தொடா்பாக மாணவா்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனா். மாணவா்களுக்கு கைகளை சோப்பு போட்டு கழுவும் முறை குறித்த செயல் விளக்க பயிற்சியும், நலமுடன் வாழ 10 கட்டளைகள் குறித்த விழிப்புணா்வு சுவரொட்டிகளும், நல உதவிகளும் வழங்கப்பட்டன.

இதில் சத்துணவு திட்ட அமைப்பாளா்கள் சகாயமேரி, முனிய தங்கம், ரோட்டரி மாவட்ட துணை ஆளுநா் முத்துசெல்வன், பள்ளி ஆசிரியா்கள் அனிதா, ஏஞ்சலின் பிளாரன்ஸ், ஜெயலட்சுமி, சமூகத் தணிக்கை குழு உறுப்பினா்கள் கலைச்செல்வி, அருணா, சிவசக்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com