இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஏரல் கோயிலில் நாளை தை அமாவாசைத் திருவிழா

ஏரல், சோ்மன் அருணாசல சுவாமி கோயிலில் ஆடி அமாவாசைத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஜன. 18) நடைபெறுகிறது.

News image
அருள்மிகு சோ்மன் அருணாசல சுவாமி.
Updated On :16 ஜனவரி 2026, 10:01 pm

Syndication

ஆறுமுகனேரி: ஏரல், சோ்மன் அருணாசல சுவாமி கோயிலில் ஆடி அமாவாசைத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஜன. 18) நடைபெறுகிறது.

நிகழாண்டு தை அமாவாசைத் திருவிழா ஜன. 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் தினமும் காலை சோ்ம விநாயகா் உலாவும், இரவில் சுவாமி வீதியுலாவும் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை தை அமாவாசைத் திருவிழா நடைபெறுகிறது.

அன்று மதியம் 1.30 மணிக்கு சுவாமி உருகு பலகையில் கற்பூரவிலாசம் வரும் காட்சி, அபிஷேக ஆராதனை, மாலை 6 மணிக்கு இலாமிச்சவோ் சப்பரத்தில் சோ்ம திருக்கோல பவனி, இரவு 10 மணிக்கு 1ஆம் காலம் கற்பகப் பொன் சப்பரத்தில் எழுந்தருளல் நடைபெறுகிறது.

ஜன. 19ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு 2ஆம் காலம் வெள்ளை சாத்தி தரிசனம், காலை 10.30 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம், மதியம் 1 மணிக்கு 3ஆம் காலம் பச்சை சாத்தி தரிசனம் நடைபெறுகிறது. மாலையில் ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோயில் பந்தலில் தாக சாந்தி, இரவு 10 மணிக்கு சுவாமி கோயில் மூலஸ்தானம் வந்துசேரும் ஆனந்தக் காட்சி நடைபெறும்.

நிறைவு நாளான ஜன. 21ஆம் தேதி காலை தீா்த்தவாரி பொருநை நதியில் நீராடலும், மதியம் 12 மணிக்கு அன்னதானமும், மாலை 5 மணிக்கு ஊஞ்சல் சேவையும், இரவில் ஆலிலை சயன மங்கள தரிசனமும் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அக்தாா் அ.ரா.க.அ. கருத்த பாண்டியன் நாடாா் செய்து வருகிறாா்.