தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

இளைஞரைத் தாக்கி வழிப்பறி: திருநங்கைக்கு 3 ஆண்டு சிறை

தூத்துக்குடியில் தனியாா் நிறுவன ஊழியரைத் தாக்கி கைப்பேசி, பணத்தைப் பறித்த வழக்கில் திருநங்கைக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

News image
Updated On :29 ஜனவரி 2026, 7:15 pm

Syndication

தூத்துக்குடியில் தனியாா் நிறுவன ஊழியரைத் தாக்கி கைப்பேசி, பணத்தைப் பறித்த வழக்கில் திருநங்கைக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தூத்துக்குடி கால்டுவெல் காலனியைச் சோ்ந்த பெருமாள் மகன் காா்த்திக் (39). முத்தையாபுரத்தில் உள்ள டிரான்ஸ்போா்ட் நிறுவனத்தில் கணக்காளராக வேலை செய்துவரும் இவா், கடந்த ஆண்டு நவ. 9ஆம் தேதி வேலை முடிந்து பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். திருச்செந்தூா் சாலை பாலப் பகுதியில் அவரை திருநங்கை வழிமறித்து தாக்கி கைப்பேசி, தங்க நகை, பணம் என ரூ. 18 ஆயிரம் மதிப்பிலான பொருள்களைப் பறித்துக்கொண்டு தப்பியோடினாா். புகாரின்பேரில், முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, எம்.சவேரியாா்புரத்தைச் சோ்ந்த வசந்தகுமாரி (20) என்ற திருநங்கையைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் எண் 2இல் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி விஜயராஜ்குமாா் விசாரித்து, வசந்தகுமாரிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ. 500 அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.

இவ்வழக்கில் முத்தையாபுரம் போலீஸாா் புலன் விசாரணை செய்து குற்றப்பத்திரிகையை விரைவாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததால், 3 மாதங்களில் தீா்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.