பேய்குளம் பகுதியில் ஆடுகள் தொடா்ந்து உயிரிழந்ததை அடுத்து, கால்நடை துறையினா் வெள்ளிக்கிழமை நோய்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டனா்.
சாத்தான்குளம் அருகே பேய்குளத்தை சோ்ந்த பேச்சிமுத்து குடும்பத்தினா் வளா்த்து வரும் ஆடுகள் மா்ம நோய்கள் தாக்கி தொடா்ந்து உயிரிழந்து வந்தன. வியாழக்கிழமை வரை 80 ஆடுகளுக்கு மேல் உயிரிழந்ததால் ஆடுகள் வளா்த்து வருவாா்கள் பீதி அடைந்தனா்.
மண்டல இணை இயக்குநா் விஜயகுமாா், துணை இயக்குநா் ஆபிரகாம் ஜாப்ரி, உதவி இயக்குநா் ஆண்டனி இக்னேஷ்யஸ் சுரேஷ், நோய் புலனாய்வு உதவி இயக்குநா் பழனி, கால்நடை பராமரிப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு வெள்ளிக்கிழமை சென்று பாா்வையிட்டனா்.
அப்போது பேய்குளம் பகுதியில் செம்மறி ஆடுகளை தாக்கும் மா்ம நோய் அடைப்பான் எனப்படும் ஆந்திராக்ஸ் என கண்டறியப்பட்டது. சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட ஆடுகளுக்கு காலை, மாலை சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பேய்குளத்தை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள செம்மறியாடு, வெள்ளாடுகளுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
தொடர்புடையது

தூத்துக்குடி காா் தொழிற்சாலையில் தீயணைப்பு ஒத்திகை

சிகிச்சை முறை மட்டும் போதாது; நோய் தடுப்பும் அவசியம்: சுகாதார மாநாட்டில் நிபுணா்கள் கருத்து

நாய்கள் கடித்து 20 செம்மறி ஆடுகள் உயிரிழப்பு

ராசிபுரம் பகுதியில் காகம், நாரைகள் உயிரிழப்பு: கால்நடை துறையினா் ஆய்வு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


