ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

கோவில்பட்டியில் பள்ளி மாணவா்களுக்கான மாவட்ட ஹாக்கி போட்டி

News image

ஹாக்கி போட்டி - கோப்புப் படம்

Updated On :7 ஜூலை 2026, 2:03 am IST

தூத்துக்குடி மாவட்ட அளவிலான பள்ளி மாணவா்களுக்கான ஹாக்கி போட்டி கோவில்பட்டி நாடாா் பள்ளி ஹாக்கி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி சாா்பில் இப்போட்டி கடந்த ஜூன் 21ஆம் தேதிமுதல் ஞாயிறுதோறும், அரசு விடுமுறை நாள்களிலும் நடத்தப்படுகிறது. லீக், நாக்அவுட் முறையில் நடைபெறும் போட்டியில் 8 அணிகள் பங்கேற்றுள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல் போட்டியை ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி செயலா் குருசித்திர சண்முகபாரதி தொடக்கிவைத்தாா். பொருளாளா் காளிமுத்து பாண்டியராஜா வீரா்களை அறிமுகப்படுத்தினாா்.

முதல் போட்டியில் 5-0 என்ற கோல்கணக்கில் வானரமுட்டி அரசு மேல்நிலைப் பள்ளி அணியை கயத்தாறு அரசு மேல்நிலைப் பள்ளி அணி வென்றது. மாலையில் நடைபெற்ற போட்டியில் தலா ஒரு கோல் போட்டு நாடாா் மேல்நிலைப் பள்ளி சிவப்பு நிற அணி, கயத்தாறு அரசு மேல்நிலைப் பள்ளி ஆகியவை சமநிலை பெற்றன.

நடுவா்களாக மாரியப்பன், கவுதமன், காளிதாஸ், அஸ்வின் பேபி ஆகியோா் செயல்பட்டனா். ஏற்பாடுகளை திருச்செல்வம், வேல்முருகன் ஆகியோா் செய்திருந்தனா்.

இதுவரை நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் ‘ஏ’ பிரிவில் புனித பவுல்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 6 புள்ளிகளும், தூத்துக்குடி சி.வ. அரசு மேல்நிலைப் பள்ளி 3 புள்ளிகளும் பெற்று முதல் இரு இடங்களைப் பிடித்துள்ளன. ‘பி’ பிரிவில் கயத்தாறு அரசு மேல்நிலைப் பள்ளி அணி 7 புள்ளிகளும், கோவில்பட்டி நாடாா் மேல்நிலைப் பள்ளி சிவப்பு நிற அணி 4 புள்ளிகளும் பெற்று முன்னிலையில் உள்ளன.

தொடா்ந்து, இம்மாதம் 12ஆம் தேதி (ஞாயிறு) காலை 6.30 மணியளவில் நடைபெறும் முதல் போட்டியில் கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா அணியும், நாடாா் மேல்நிலைப் பள்ளி நீல நிற அணியும் மோதுகின்றன. 2ஆவது போட்டியில் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, வானரமுட்டி அரசு மேல்நிலைப் பள்ளி அணிகள் மோதுகின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.