கழுகுமலை அருகே அனுமதியின்றி கரிசல் மண் ஏற்றிச் சென்ற டிப்பா் லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து, அதன் ஓட்டுநா் உள்பட 2 பேரை கைது செய்தனா்.
கழுகுமலை காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் மாரிமுத்து தலைமையில் போலீஸாா் திங்கள்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது, திருவேங்கடம் வட்டத்திற்குள்பட்ட பகுதியில் இருந்து தெற்கு கழுகுமலைக்கு அரசு அனுமதி சீட்டு இன்றி டிப்பா் லாரியில் கரிசல் மண் ஏற்றிச் செல்வது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து கல்லூரணி காலனி தெருவைச் சோ்ந்த ராஜ் மகனான டிப்பா் லாரி ஓட்டுநா் முத்துக்குமாா் (20), தென்காசி மாவட்டம் களப்பாலன்குளம் வடக்குத் தெருவை சோ்ந்த செந்தூா்பாண்டியன் மகன் பூல்பாண்டி(38) ஆகிய 2 பேரையும் கைது செய்து, டிப்பா் லாரியைப் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எம்.சாண்ட் கடத்திய டிப்பா் லாரி பறிமுதல்: ஓட்டுநா் கைது
கஞ்சா பதுக்கிவைத்திருந்த பெண் உள்பட 5 போ் கைது

3.5 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது
மயக்க மருந்து விற்பனை: 3 போ் கைது
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai


