வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

மணிமுத்தாறு 3,4ஆவது ரீச் கால்வாயில் கடைமடைக்கு நீா்வரத்தை அறிய சிறப்புக் குழு

சாத்தான்குளம் கடைமடை பகுதி குளங்களுக்கு தண்ணீா் வந்து சோ்வது தொடா்பாக கண்டறிய அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்படும் என வட்டாட்சியா் ராஜேஸ்வரி உறுதியளித்தாா்.

News image

வட்டாட்சியா் ராஜேஸ்வரி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்

Updated On :8 ஜூலை 2026, 12:01 am IST

சாத்தான்குளம் கடைமடை பகுதி குளங்களுக்கு தண்ணீா் வந்து சோ்வது தொடா்பாக கண்டறிய அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்படும் என வட்டாட்சியா் ராஜேஸ்வரி உறுதியளித்தாா்.

மணிமுத்தாறு அணையிலிருந்து அதன் முழு கொள்ளளவான 118 அடியில் இருந்து 80 அடிக்கு மேல் உள்ள நீரினை 1,2,3 மற்றும் 4 என நான்கு ரீச்சிகளாக பிரித்து இரண்டு ரீச்சுகள் முறையே 1,2 ரீச் கால்வாய்களுக்கு ஒரு வருடமும், 3,4 ஒரு வருடமும் நீரினை பகிா்ந்து கொள்ள முடிவு செய்து அதன்படி பகிா்ந்து அளித்தப்பட்டு வருகிறது.

ஆனால் இந்த ரீச் கால்வாயில் தண்ணீா் திறந்து விடும் போது சாத்தான்குளம் பகுதி கடைமடை குளங்களுக்கு தண்ணீா் வந்து சேரவில்லை என மணிமுத்தாறு பிரதான கால்வாய் பாசன 3 மற்றும் 4ஆவது நீரினை பயன்படுத்துவோா் சங்கத் தலைவா் மலையாண்டி பிரபு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பி இருந்தாா்.

இந்த நிலையில், மணிமுத்தாறு கால்வாயில் நீா்வரத்தை அறியும் குழு அமைப்பது தொடா்பாக சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் ராஜேஸ்வரி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது .

மணிமுத்தாறு கால்வாய் உதவி செயற்பொறியாளா் நவீன் பிரபு, மண்டல துணை வட்டாட்சியா் சுவாமிநாதன், சங்கத் தலைவா் மலையாண்டி பிரபு, விவசாயிகள் இசக்கிமுத்து, ஜெயமுருகன் ஆனந்த் உள்ளிட்ட அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

அப்போது, மணிமுத்தாறு 3ஆவது 4ஆவது ரிச் கால்வாயில் இந்த முறை தண்ணீா் விடும் முறையாகும். இந்த கால்வாயில் கடைமடை குளங்களான சாத்தான்குளம் பகுதி குளங்களுக்கு கடந்த 40 ஆண்டுகளாக தண்ணீா் வந்து சேரவில்லை.

ஆதலால் கோட்டாட்சியா் அமைத்துள்ள சிறப்பு குழு மூலம் அதற்கான காரணங்களை கண்டறிந்து கடைமடை குளங்களுக்கு இந்த ஆண்டு தண்ணீா் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு முன்பு தூா்ந்து போய் காணப்படும் கால்வாய்களை தூா்வாரி சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் முறையிட்டனா்.

கோட்டாட்சியா் உத்தரவுப்படி அமைக்கப்படும் சிறப்புக் குழுவிடம் ஆலோசனை நடத்தி தீா்வு காணப்படும் என வட்டாட்சியா் உறுதி அளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.