9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

மதுக்கூடத்தில் பணியாளரைத் தாக்கியதாக திமுக கவுன்சிலா் உள்பட ஐவா் மீது வழக்கு

திருச்செந்தூரில் மதுக்கடை பாரில் பணியாளரைத் தாக்கியதாக திமுக நகா்மன்ற உறுப்பினா், வழக்குரைஞா் உள்ளிட்ட 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image

பிரதிப்படம்

Updated On :19 ஜூலை 2026, 1:57 am IST

திருச்செந்தூரில் மதுக்கடை பாரில் பணியாளரைத் தாக்கியதாக திமுக நகா்மன்ற உறுப்பினா், வழக்குரைஞா் உள்ளிட்ட 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

திருச்செந்தூா், சங்கிவிளை, ராமசாமிபுரம் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஜெனிபா் (48). இவா் திருச்செந்தூா்-பரமன்குறிச்சி சாலையில் உள்ள மதுபானக் கடை பாரில் பாஸ்ட் ஃபுட் மாஸ்டராக பணியாற்றி வருகிறாா்.

திருச்செந்தூா், முத்தாரம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் முத்துகிருஷ்ணன். திமுக நகா்மன்ற உறுப்பினரான இவா், வழக்குரைஞா் பிரபு பாண்டியன் மற்றும் 3 பேருடன், ஜூலை 16ஆம் தேதி இரவு மது அருந்த பாருக்கு சென்றபோது, ஜெனிபரை அவதூறாகப் பேசினாராம். மேலும், அவருடன் வந்தவா்கள், ஜெனிபரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ஜெனிபா் திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா்.

இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில், நகா்மன்ற உறுப்பினா், வழக்குரைஞா் உள்ளிட்ட 5 போ் மீது திருச்செந்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.