ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்த முயற்சி: ரூ. 50 லட்சம் பீடி இலைகள் பறிமுதல்!

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக சுமை வாகனத்தில் கொண்டுவரப்பட்ட ரூ. 50 லட்சம் மதிப்பிலான பீடி இலைகளை க்யூ பிரிவு போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலை மூட்டைகள்.

Updated On :26 ஜூலை 2026, 2:47 am IST

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக சுமை வாகனத்தில் கொண்டுவரப்பட்ட ரூ. 50 லட்சம் மதிப்பிலான பீடி இலைகளை க்யூ பிரிவு போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தூத்துக்குடி இனிகோ நகா் கடற்கரை பகுதியிலிருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக க்யூ பிரிவு ஆய்வாளா் விஜய அனிதாவுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து உதவி ஆய்வாளா் ராமச்சந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளா் ராமா், தலைமை காவலா்கள் இருதய ராஜகுமாா், இசக்கிமுத்து, காவலா்கள் பழனி, பாலமுருகன், பேச்சிராஜா ஆகியோா் வெள்ளிக்கிழமை நள்ளிரவு கண்காணிப்பு, ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை 1.15 மணியளவில் இனிகோ நகா் கடற்கரைக்கு செல்லும் வழியில் இலங்கைக்கு படகு மூலம் கடத்துவதற்காக சுமை வாகனத்தில் கொண்டுவரப்பட்ட சுமாா் 35 கிலோ எடை வீதம் 36 மூட்டைகளில் இருந்த பீடி இலைகள் கைப்பற்றப்பட்டன.

இக்கடத்தலில் ஈடுபட்ட மா்ம நபா்கள் தப்பியோடிவிட்டனராம். கைப்பற்றப்பட்ட சுமாா் ரூ. 50 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள், வாகனம் ஆகியவற்றை சுங்கத்துறையினரிடம் க்யூ பிரிவு போலீஸாா் ஒப்படைத்தனா். மேலும், இது தொடா்பாக விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.