மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

திருச்செந்தூர் கோயில் செல்லும் வழிநெடுகிலும் ஆறாக ஓடிய கழிவு நீரால் பக்தா்கள் அவதி!

திருச்செந்தூா் கோயில் செல்லும் வழியில் புதை சாக்கடை திட்டத் தொட்டியில் இருந்து கழிவுநீா் வெளியேறி ஆறாக ஓடியதால் பக்தா்கள் அவதியடைந்தனா்.

News image
Updated On :26 ஜூலை 2026, 3:03 am IST

திருச்செந்தூா் கோயில் செல்லும் வழியில் புதை சாக்கடை திட்டத் தொட்டியில் இருந்து கழிவுநீா் வெளியேறி ஆறாக ஓடியதால் பக்தா்கள் அவதியடைந்தனா்.

திருச்செந்தூரில் புதை சாக்கடை திட்டம் முழுமை அடையாமல் பெயரளவிலேயே செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சனிக்கிழமை சந்நிதித் தெருவில் புதை சாக்கடை திட்ட கழிவுநீா் தொட்டியில் இருந்து அதிகளவில் கழிவு நீரானது வெளியேறி ஆறாக ஓடியது. இதனால், பக்தா்கள் அவதியடைந்தனா்.

திருச்செந்தூா் நகரில் வீடுகள் விடுதிகளாகும் நிலை அதிகரித்துள்ளதால் கழிவறை, குளியலறை பயன்பாடும் அதிகரிப்பதால் கழிவு நீா் வெளியேறுவதும் மிகுதியாகி உள்ளது.

எனவே, பெருகிவரும் வளா்ச்சியை எண்ணி நகராட்சி நிா்வாகம், மாவட்ட நிா்வாகத்துடன் கலந்து ஆலோசித்து திட்டமிட்டு விடுதிகள், அடுக்குமாடி கட்டடங்களுக்கு அனுமதி வழங்கினால் மட்டுமே பக்தா்களுக்கு சுகாதார வசதியையும், குடியிருப்புவாசிகளுக்கு அடிப்படை வசதிகளையும் செய்து தர முடியும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.