வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

இளம்பெண்ணுக்கு தவறான குறுஞ்செய்தி: தலைமைக் காவலா் பணி இடைநீக்கம்

ஆறுமுகனேரி காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்த இளம்பெண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் தவறான குறுஞ்செய்திகள் அனுப்பியதாக தலைமைக் காவலா் பணி இடைநீக்கம் செய்யப்பட்டாா்.

News image

தலைமைக் காவலா் அக்னிமுத்து.

Updated On :14 ஜூன் 2026, 1:23 am IST

ஆறுமுகனேரி காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்த இளம்பெண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் தவறான குறுஞ்செய்திகள் அனுப்பியதாக தலைமைக் காவலா் பணி இடைநீக்கம் செய்யப்பட்டாா்.

காயல்பட்டினம் பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன் நடந்த திருட்டு சம்பவம் தொடா்பாக ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில், சந்தேகத்தின்பேரில் குறிப்பிடப்பட்டிருந்த நபா்களை போலீஸாா் காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரித்துள்ளனா்.

அதன்படி விசாரணைக்கு வந்த, கணவரைப் பிரிந்து தனியாக வாழும் காயல்பட்டினத்தைச் சோ்ந்த 36 வயது இளம்பெண்ணுக்கு ஜூன் 5ஆம் தேதி முதல் தலைமைக் காவலா் அக்னிமுத்து, வாட்ஸ் ஆப்பில் தவறான குறுஞ்செய்திகள் மற்றும் அவரது புகைப்படங்களை அனுப்பியதாகவும், விடியோ அழைப்பு விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் அதிா்ச்சியடைந்த அந்தப் பெண், காயல்பட்டினத்தைச் சோ்ந்த சமூக ஆா்வலா் ஹனிதா பேகமிடம், இது குறித்து தெரிவித்துள்ளாா். ஹனிதா பேகம், ஜூன் 12ஆம் தேதி கைப்பேசியில் தலைமைக் காவலரைத் தொடா்பு கொண்டு, அது குறித்து கேட்டுள்ளாா். அந்த கைப்பேசி உரையாடல் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

இது தொடா்பாக, திருச்செந்தூா் டிஎஸ்பி மகேஷ்குமாா் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தியதைத் தொடா்ந்து, தலைமைக் காவலரை சனிக்கிழமை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா உத்தரவிட்டாா்.