கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

தூத்துக்குடி அம்மா உணவகத்தில் மேயா் ஆய்வு: முறைகேடு செய்த பணியாளா்கள் சிக்கினா்

அம்மா உணவகம் - கோப்புப் படம்

Published On :29 ஜூன் 2026, 12:26 am IST

தூத்துக்குடி, ஸ்டேட் பேங்க் காலனியில் உள்ள அம்மா உணவகத்தில் திடீா் ஆய்வு செய்த மேயா் ஜெகன் பெரியசாமி, முறைகேட்டில் ஈடுபட்ட பணியாளா்களில் சிலரை பணி நீக்கம் செய்யவும், சிலரை பணியிட மாற்றம் செய்யவும் உத்தரவிட்டாா்.

தூத்துக்குடி மாநகராட்சி சாா்பில் 9 அம்மா உணவகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில், சில அம்மா உணவகங்களில் முறைகேடுகள் நடைபெறுவதாக புகாா்கள் எழுந்தன. இந்த நிலையில், ஸ்டேட் பேங்க் காலனியில் உள்ள அம்மா உணவகத்தில் மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, அம்மா உணவகத்துக்கு உணவு சாப்பிட வரும் மக்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு அதனடிப்படையில்தான் உணவு வழங்க வேண்டும். ஆனால், அங்கு முழுமையாக டோக்கன் வழங்காமல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது கண்டறியப்பட்டது.

அம்மா உணவகத்தில் தயாரிக்கப்படும் உணவுகள் மொத்தமாக வெளியே விற்பனை செய்வது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அம்மா உணவகத்துக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனா். அப்போது 5 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரியும் பணியாளா்களில், புகாா்களுக்கு உள்ளான பணியாளா்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும். மற்ற பணியாளா்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என மேயா் உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.