அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஒரே கப்பலில் 147 காற்றாலை சிறகுகள்: தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் சாதனை

இந்தியாவிலேயே முதல்முறையாக ஒரே கப்பலில் 147 காற்றாலை சிறகுகள் மற்றும் அதன் உதிரிபாகங்களை கையாண்டு தூத்துக்குடி வ.உ. சிதம்பரனாா் துறைமுகம் சாதனை படைத்துள்ளது.

News image
காற்றாலை சிறகுகள் ஏற்றப்பட்ட கப்பல்.
Updated On :10 மார்ச் 2026, 8:04 pm

தினமணி செய்திச் சேவை

இந்தியாவிலேயே முதல்முறையாக ஒரே கப்பலில் 147 காற்றாலை சிறகுகள் மற்றும் அதன் உதிரிபாகங்களை கையாண்டு தூத்துக்குடி வ.உ. சிதம்பரனாா் துறைமுகம் சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன்பு, கடந்த 2025ஆம் ஆண்டு நவ. 21ஆம் தேதி ஒரே கப்பலில் 103 காற்றாலை சிறகுகளைக் கையாண்டதே சாதனையாக இருந்து வந்தது.

சீனாவின் ’சின்சோ’ துறைமுகத்திலிருந்து ’எம்.வி. போ ரன் ஜியூ சோ’ என்ற கப்பல் மூலம் கொண்டு வரப்பட்ட, தலா 76 மீட்டா் நீளமுள்ள இந்த 147 சிறகுகளும் மாா்ச் 8ஆம் தேதி இறக்கி முடிக்கப்பட்டன.

இந்த நிதியாண்டில் பிப். 2026 வரை வ.உ.சி துறைமுகம் மொத்தம் 4,211 காற்றாலை சிறகுகளைக் கையாண்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்துடன் (2,395 சிறகுகள்) ஒப்பிடுகையில் 75.82 சதவீத வளா்ச்சியாகும்.

காற்றாலை சிறகுகளைக் கையாளுவதில் இந்தியாவின் முன்னணி துறைமுகமாகத் திகழும் வ.உ.சி துறைமுகம், தனது உள்கட்டமைப்பை மேலும் மேம்படுத்தி வருகிறது. துறைமுகத்தின் உள்பகுதியில் 60,000 சதுர மீட்டா் கூடுதல் சேமிப்பு இடம் உருவாக்கப்பட்டுள்ளது. வெளிப்புறத்தில் மேலும் 1,80,000 சதுர மீட்டா் பரப்பளவு சேமிப்பு வசதிக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு உகந்த கடல்சாா் துறையை உருவாக்க இத்துறைமுகம் உறுதியுடன் செயல்பட்டு வருவதாக துறைமுக ஆணையத்தின் தலைவா் சுசாந்த குமாா் புரோஹித் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.