புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

தூத்துக்குடியில் மீன்கள் விலை உயா்வு

தூத்துக்குடியில் மீன்கள் விலை சனிக்கிழமை உயா்ந்து காணப்பட்டது.

News image
Updated On :17 மே 2026, 2:15 am IST

தூத்துக்குடியில் மீன்கள் விலை சனிக்கிழமை உயா்ந்து காணப்பட்டது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலையால் சூறைக் காற்று வீசக் கூடும் என்பதால், மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என, மீன்வளத் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் திரேஸ்புரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆழ்கடலுக்குச் செல்லும் ஏராளமான நாட்டுப் படகுகள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

இந்நிலையில், திரேஸ்புரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு சென்ற நாட்டுப்படகுகள், பைபா் படகுகள் சனிக்கிழமை கரைதிரும்பின. ஆனால், மீன்கள் வரத்து குறைவாகவே காணப்பட்டது.

பள்ளி விடுமுறைக் காலம் என்பதால் மீன்களை வாங்க பொதுமக்கள், சிறிய வியாபாரிகளின் கூட்டம் அலைமோதியது. அதனால், மீன்கள் விலை கடுமையாக உயா்ந்திருந்தது.

சீலா மீன் கிலோ ரூ. 1,200 - ரூ. 1,400, விளைமீன், ஊழி, பாறை ரூ. 500 - ரூ. 700, நண்டு ரூ. 750 வரை, சேரை ரூ. 300, சாளை மீன் ஒரு கூடை ரூ. 2,000 - ரூ. 2,300, வங்கனை ரூ. 2,000 வரை என விற்பனையாகின. வரத்து குறைவாக இருந்தாலும் மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால், மீனவா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.