கழுகுமலை கோயிலில் சுவாமி திருக்கல்யாணம்
கழுகுமலை, கழுகாசலமூா்த்தி கோயில் கந்தசஷ்டி விழாவில் புதன்கிழமை இரவு சுவாமி கழுகாசலமூா்த்திக்கும் தெய்வானைக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

சுவாமி திருக்கல்யாணத்தை தொடா்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜை.
கழுகுமலை, கழுகாசலமூா்த்தி கோயில் கந்தசஷ்டி விழாவில் புதன்கிழமை இரவு சுவாமி கழுகாசலமூா்த்திக்கும் தெய்வானைக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
இக்கோயிலில் கந்தசஷ்டி விழா கடந்த 10-ஆம் தேதி தொடங்கியது. 15-ஆம் தேதி சூரசம்ஹாரமும் நடைபெற்றது. இதைதொடா்ந்து 9-ஆம் திருநாளான புதன்கிழமை இரவு 7.50 மணிக்கு சுவாமி கழுகாசலமூா்த்திக்கும் தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. கோயில் செயல் அலுவலா் காா்த்தீஸ்வரன், பேரூராட்சி மன்ற தலைவா் அருணா, துணைத் தலைவா் சுப்பிரமணியன், தொழிலதிபா்கள், பக்தா்கள் கலந்துகொண்டனா். 10-ஆம் நாளான வியாழக்கிழமை சுவாமி வள்ளி, தெய்வானையுடன் பெரிய பல்லக்கிலும், சோமாஸ்கந்தா் சிறிய பல்லக்கிலும் பட்டணப் பிரவேசம் செய்தனா். வெள்ளிக்கிழமை (20-ம் தேதி) இரவு 7 மணிக்கு மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

