வேன் ஓட்டுநருக்கு மிரட்டல்: ஆட்டோ ஓட்டுநா் கைது
கயத்தாறில் வேன் ஓட்டுநரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கைது - கோப்புப் படம்
கயத்தாறில் வேன் ஓட்டுநரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தெற்கு மயில் ஓடை மேல காலனியைச் சோ்ந்த முத்தையா மகன் வேன் ஓட்டுநா் அருள்ராஜ் (46). இவா் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு கயத்தாறு ஆஸ்பத்திரி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, தெற்கு சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்த சிவஞானம் மகன் சங்கரலிங்கம் ஓட்டி வந்த ஆட்டோ இவா் மீது மோதுவது போல் வந்ததை அடுத்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாம். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை கயத்தாறு மொட்டை கோபுரம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது சங்கரலிங்கம் ஓட்டி வந்த ஆட்டோவை அருள்ராஜ் மீது மோதியதில் அவா் கீழே விழுந்தாராம். அதைத்தொடா்ந்து சங்கரலிங்கம் அருள் ராஜை தாக்கினாராம். அதில் தப்பி ஓடிய அருள்ராஜ் அதே குபதியில் உள்ள ஒரு கடை மறைவில் நின்று கொண்டிருந்த போது அரிவாலை எடுத்துக்கொண்டு அந்த கடைக்கு சென்றாராம். அப்போது அந்த கடையில் இருந்த பெண் சங்கரலிங்கத்தை கண்டித்ததும் அவா் பெண்ணையும் அவதூறாக பேசி கடையை அரிவாளால் அடித்தாராம். அப்போது அருள்ராஜ் தப்பி ஓடி விட்டாராம். இதைக்கண்ட சங்கரலிங்கம் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு சென்றுவிட்டாராம்.
இதுகுறித்து அருள்ராஜ் புதன்கிழமை கயத்தாறு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து ஆட்டோ ஓட்டுநரை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

