பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

குலசை தசரா திருவிழா பாதுகாப்புப் பணியில் 4,000 போலீஸாா்: ஆலோசனைக் கூட்டத்தில் தகவல்

குலசை தசரா திருவிழா பாதுகாப்புப் பணியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபடுத்தப்படுவா் என கோட்டாட்சியா் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

கோட்டாட்சியா் கௌதம் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Published On :

குலசை தசரா திருவிழா பாதுகாப்புப் பணியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபடுத்தப்படுவா் என கோட்டாட்சியா் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

குலசேகரன்பட்டினம், ஞானமூா்த்தீஸ்வரா் உடனுறை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா அக். 11ஆம் தேதி தொடங்கி அக். 20ஆம் தேதி நிறைவடைகிறது. விழாவில் லட்சக்கணக்கான பக்தா்கள் கலந்து கொள்வாா்கள் என்பதால், பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் தொடா்பான அரசு துறை அலுவலா்கள் ஆலோசனைக் கூட்டம், திருசெந்தூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

கோட்டாட்சியா் கௌதம் தலைமை வகித்தாா். திருச்செந்தூா் வட்டாட்சியா் தங்கச்சாமி, கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் பாலசுந்தரம், குலசை கோயில் செயல் அலுவலா் வள்ளிநாயகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், பக்தா்களுக்கான அடிப்படை வசதிகள் செய்வது, அக். 18 முதல் 21ஆம் தேதி தேதி வரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவா், முக்கிய நாள்களில் 150-க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்குவது எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.