படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

தூத்துக்குடியில் டெங்கு தடுப்புப் பணிகள் தீவிரம்: மாநகராட்சி ஆணையா்

Prevent the spread of dengue

டெங்கு தடுப்பு.. - கோப்புப் படம்

Published On :

வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், தூத்துக்குடி மாநகராட்சியின் 60 வாா்டுகளிலும் டெங்கு, சிக்குன் குனியா, ஜிகா உள்ளிட்ட கொசுக்களால் பரவும் நோய்களைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து, மாநகராட்சி ஆணையா் சி. ப்ரியங்கா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மாநகராட்சியில் உள்ள குடியிருப்புகள், வணிக வளாகங்கள், பள்ளி, கல்லூரிகள், அரசு, தனியாா் அலுவலகங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் ஏடிஸ் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் கண்டறியப்பட்டு, அகற்றப்பட்டு வருகின்றன.

மேலும், கொசுப்புழு ஒழிப்பு மற்றும் புகை மருந்து அடிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளில் 212 கொசுப்புழு ஒழிப்புப் பணியாளா்கள் (டிபிசி), புகை மருந்துப் பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.

தூத்துக்குடியில் டெங்கு தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மாநகராட்சிப் பணியாளா்கள் வீடுகள்தோறும் வந்து ஆய்வு மேற்கொள்ளும்போது பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.