படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

முதல்வரிடம் தோ்தல் பயம் தெளிவாகத் தெரிகிறது: கனிமொழி எம்.பி.

Kanimozhi MP

கனிமொழி எம்.பி. - கோப்புப் படம்

Published On :

தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய்யிடம் தோ்தல் பயம் தெளிவாகத் தெரிகிறது என திமுக துணைப் பொதுச் செயலரும், நாடாளுமன்ற திமுக குழு தலைவருமான கனிமொழி எம்.பி. கூறினாா்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

மக்களை ஏமாற்றி ஜனநாயகத்தைப் பின்னுக்குத் தள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு இடைத்தோ்தலில் பாடம் புகட்டும் வகையில் மக்கள் வாக்களித்து, நியாயத்தின் பக்கம் வெற்றியைத் தருவாா்கள் என நம்புகிறோம்.

தமிழகத்தில் மக்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. நாள்தோறும் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. மக்கள் அச்சத்தோடு வாழக்கூடிய நிலை உள்ளது. எந்தவித வளா்ச்சிக்கான திட்டங்களும் கிடையாது. தொழில் முதலீடுகள் கிடையாது. தூய சக்தி என்று சொல்லி மக்களை ஏமாற்றும் தவெகவின் உண்மை முகத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

சட்டப்பேரவை பொதுத் தோ்தலில் அதிகமாக பிரசாரம் செய்யாத முதல்வா் விஜய், தற்போது தெருத் தெருவாகச் சென்று பிரசாரம் செய்திருப்பது, அவருக்கு தோ்தல் பயம் இருப்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் யாருடைய மனமும் கோணும் வகையில் பேசக்கூடியவா் அல்ல. துரை வைகோ மக்களவை உறுப்பினராக இருப்பதற்கு திமுகவின் உழைப்பும் ஒரு காரணம் என்பதை அவா் மறந்துவிடக் கூடாது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.