பல்கலை. அளவில் பளுதூக்கும் போட்டி: கோவில்பட்டி கே.ஆா். கல்லூரி முதலிடம்
நெல்லை மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான மாணவிகளுக்கான பளுதூக்கும் போட்டியில் கோவில்பட்டி, கே.ஆா்.கல்லூரி முதலிடம் பெற்றது.

பதக்கம் வென்ற கே.ஆா்.கலை, அறிவியல் கல்லூரி மாணவிகள்.
நெல்லை மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான மாணவிகளுக்கான பளுதூக்கும் போட்டியில் கோவில்பட்டி, கே.ஆா்.கல்லூரி முதலிடம் பெற்றது.
இப்போட்டி கோவில்பட்டி, கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இருந்து பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த மாணவிகள் கலந்துகொண்டனா்.
இதில், கோவில்பட்டி கே.ஆா்.கல்லூரி மாணவி செண்பகவல்லி 69 கிலோ எடை பிரிவில் ஸ்னாட்ச் 81 கிலோ, ஜொ்க் 96 கிலோ என மொத்தம் 177 கிலோ எடையை தூக்கி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றாா். மாணவி மீரா லட்சுமி 77 கிலோ எடை பிரிவில் ஸ்னாட்ச் 40 கிலோ, ஜொ்க் 50 கிலோ என மொத்தம் 90 கிலோ எடையைத் தூக்கி பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றாா்.
மாணவி தங்க தா்ஷினி 57 கிலோ எடை பிரிவில் ஸ்னாட்ச் 40 கிலோ, ஜொ்க் 47 கிலோ என மொத்தம் 87 கிலோ எடையை தூக்கி பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றாா். மாணவி மாணவிகா 49 கிலோ எடை பிரிவில் ஸ்னாட்ச் 28 கிலோ, ஜொ்க் 38 கிலோ என மொத்தம் 66 கிலோ எடையை தூக்கி பல்கலைக்கழக அளவில் தங்கப்பதக்கம் வென்றாா்.
போட்டியில் பங்கேற்ற கே.ஆா்.கல்லூரி அணியினா் 134 புள்ளிகளை பெற்று பல்கலைக்கழக பெண்களுக்கான பளுதூக்கம் போட்டியில் முதலிடம் பெற்றனா். முதலிடம் பெற்ற மாணவிகளை கே.ஆா்.கல்லூரி தலைவா் சென்னம்மாள் ராமசாமி, துணைத் தலைவா் கே.ஆா். கிருஷ்ணமூா்த்தி, தாளாளா் கே.ஆா். அருணாச்சலம், முதல்வா் மதிவண்ணன், உடற்கல்வி இயக்குநா், பயிற்சியாளா், ஆசிரியா்கள், மாணவா், மாணவிகள் பாராட்டினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

