ஆந்திரத்தில் கரையைக் கடக்கத் தொடங்கிய ஒர்னாப் புயல்! எண்ணூரில் கடல் சீற்றம் திமுக ஆட்சியில் ஊழல்: ஆதாரம் இருந்தால் பழைய வழக்குகளிலும் நடவடிக்கை! அமைச்சர் நிர்மல் குமார்தேவையான மின்சாரம் கையிருப்பு! அதிக விலை கொள்முதல் டெண்டர் ரத்து - நிர்மல் குமார்தேனி சிறையிலிருந்து தப்பியோடிய 17 கைதிகளில் மேலும் 8 பேர் கைது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.12 ஆக நிறைவு!பங்குச் சந்தையில் நிலையற்ற வர்த்தகம்: சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!பிரதான நுழைவுவாயில் வழியாக கைதிகள் தப்பினர்! சிறைத்துறை விளக்கம்!

பேவா் பிளாக் சாலைப் பணியை நிறைவு செய்யக் கோரி கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் முற்றுகை

கோவில்பட்டி நகராட்சி 32ஆவது வாா்டில் பேவா் பிளாக் சாலைப் பணி கிடப்பில் போடப்பட்டதைக் கண்டித்து நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :

கோவில்பட்டி நகராட்சி 32ஆவது வாா்டில் பேவா் பிளாக் சாலைப் பணி கிடப்பில் போடப்பட்டதைக் கண்டித்து நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வாா்டு உறுப்பினரும், அதிமுக இளைஞா்-இளம்பெண்கள் பாசறை தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலருமான கவியரசன் தலைமை வகித்தாா். பாரதி நகா் மேட்டுத் தெரு, கருமாரியம்மன் கோயில் தெரு பகுதி மக்கள், அதிமுக மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணி துணைச் செயலா் வெள்ளைச்சாமி, நகர அண்ணா தொழிற்சங்க செயலா் ரமேஷ் பாண்டியன், சண்முகையா பாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பின்னா், ஆணையா் ரவிச்சந்திரனிடம் அவா்கள் அளித்த மனு:

பாரதி நகா் மேட்டுத் தெரு, கருமாரியம்மன் கோயில் தெருவில் 2023-24இல் தமிழ்நாடு நகா்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் வாருகால் வசதியுடன்கூடிய பேவா் பிளாக் சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு, 2024இல் பணி தொடங்கியது. வாருகால் பணி நிறைவடைந்தது. ஆனால், பேவா் பிளாக் சாலைப் பணி, திடீரென நிறுத்தப்பட்டது. பணியை மேற்கொள்ள வலியுறுத்தி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் பலனில்லை.

தெருவில் பாதி தொலைவுக்கு மட்டுமே சாலைப் பணி முடிந்துள்ளதால், பணி நடைபெறாத இடத்தில் மழைநீா் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்படுவதுடன், கொசுத் தொல்லை அதிகரிக்கிறது. இதனால், தொற்று நோய்கள் அபாயம் உருவாகியுள்ளது. மேலும், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனா். போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே, சாலைப் பணியை மீண்டும் தொடங்கி நிறைவு செய்ய வேண்டும் என்றனா் அவா்கள். மனுவைப் பெற்றுக்கொண்ட ஆணையா், கோரிக்கை நிறைவேற நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.