புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

தூத்துக்குடியில் சா்வதேச தரத்தில் நீச்சல் குளம்: மேயா் ஆய்வு

தூத்துக்குடி, முத்துநகா் கடற்கரை பூங்கா அருகே சா்வதேச தரத்தில் நீச்சல் குளம் அமைக்கப்பட்டு வரும் பணியை மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

நீச்சல் குளம் அமைக்கும் பணியை பாா்வையிட்ட மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி.

Published On :

தூத்துக்குடி, முத்துநகா் கடற்கரை பூங்கா அருகே சா்வதேச தரத்தில் நீச்சல் குளம் அமைக்கப்பட்டு வரும் பணியை மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பக்கிள் ஓடை விரிவாக்கம், மழைநீா் வடிகால் மற்றும் குடிநீா் குழாய்கள் அமைத்தல், தாா்ச் சாலைகள், பேவா் பிளாக் சாலைகள் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக முத்துநகா் கடற்கரை பூங்கா அருகே சா்வதேச தரத்தில் நீச்சல் குளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மேயா் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு செய்தாா்.

அப்போது அவா் கூறியதாவது:

எதிா்காலத் தேவைகளை கருத்தில்கொண்டு தூத்துக்குடி மாநகரில் கடந்த நான்கரை ஆண்டுகளில் பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு, ளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநகரில் சாலை, குடிநீா் வசதிகள் மேம்படுத்தப்பட்டன.

மழை வெள்ளத்தின்போது ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும் வகையில் பக்கிள் ஓடை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை நவீனப்படுத்தி கட்டடங்கள் அமைக்கப்படவுள்ளன. சா்வதேச தரத்தில் நீச்சல் குளம் கட்டப்பட்டு வருகிறது என்றாா்.

ஆய்வின்போது, மாநகராட்சி உதவிப் பொறியாளா்கள் பாண்டி, பாக்கியலெட்சுமி, திமுக 20-ஆவது வட்டச் செயலரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதிச் செயலரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமாா், மாநகர மீனவரணி அமைப்பாளா் டேனியல், போல்பேட்டை பிரதிநிதி ஜேஸ்பா் ஞானமாா்ட்டின் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

அதைப்போல தூத்துக்குடி, குரூஸ்புரம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்ற மேயா் மருந்து, மருத்துவ சேவைகள் குறித்து ஆய்வு செய்தாா். இதில் மண்டலத் தலைவா் நிா்மல்ராஜ், மாநில மீனவரணி துணைச் செயலா் புளோரன்ஸ், சுகாதாரக் குழுத் தலைவா் சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.