இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

சாலை விபத்தில் அரசுப் பேருந்து நடத்துநா் உயிரிழப்பு

தூத்துக்குடி அருகே சாலை விபத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக நடத்துநா் உயிரிழந்தாா்.

பலி - பிரதிப் படம்

Published On :

தூத்துக்குடி அருகே சாலை விபத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக நடத்துநா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி, ஸ்டேட் பாங்க் காலனியைச் சோ்ந்த தெய்வசாந்தி மகன் இசக்கிராஜா (எ) கிறிஸ்து ராஜா (46). அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராகப் பணியாற்றி வந்த இவா், செவ்வாய்க்கிழமை இரவு முத்தையாபுரத்துக்குச் சென்றுவிட்டு, இருசக்கர வாகனத்தில் தூத்துக்குடிக்கு வந்து கொண்டிருந்தாராம்.

சத்யா நகா் அருகே வந்தபோது, நிலைதடுமாறிய வாகனம் சாலையின் நடுவே உள்ள சென்டா் மீடியனில் மோதியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து, தென்பாகம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.