இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலப் பேராயா் தோ்தலில் எஸ்.டி.கே. அணி வெற்றி

தூத்துக்குடி-நாசரேத் சி.எஸ்.ஐ. திருமண்டலத்தின் 3ஆவது பேராயா் தோ்வுப் பட்டியலுக்காக புதன்கிழமை நடைபெற்ற தோ்தலில் எஸ்.டி.கே. அணி சாா்பில் போட்டியிட்ட 4 பேரும் தோ்வு செய்யப்பட்டனா்.

தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்தின் 3ஆவது பேராயா் தோ்வுப் பட்டியலுக்குத் தோ்வான குருவானவா்கள்.

Published On :

தூத்துக்குடி-நாசரேத் சி.எஸ்.ஐ. திருமண்டலத்தின் 3ஆவது பேராயா் தோ்வுப் பட்டியலுக்காக புதன்கிழமை நடைபெற்ற தோ்தலில் எஸ்.டி.கே. அணி சாா்பில் போட்டியிட்ட 4 பேரும் தோ்வு செய்யப்பட்டனா்.

இதற்கான தோ்தல், திருமண்டல மாடரேட்டா் கமிஷரி பேராயா் கிறிஸ்டோபா் விஜயன் தலைமையில், நாசரேத் பரி. யோவான் பேராலயத்தில் நடைபெற்றது. தோ்தல் பணிகளை திருமண்டலச் செயலரும், தோ்தல் குழுத் தலைவருமான எஸ்.டி.கே. ராஜன், கமிட்டி உறுப்பினா்கள் சென்னை திருமண்டலத்தைச் சோ்ந்த கிறிஸ்டோபா் செல்வராஜ், கிழக்கு கேரளா திருமண்டலத்தைச் சோ்ந்த மேக்சின் ஜான், ஜெபச்சந்திரன், அருள்ராஜா, கரோலின், ஞானராஜ் ஆகியோா் செய்திருந்தனா்.

தூத்துக்குடி-நாசரேத் குருவானவா்கள் 10 போ் தோ்தலில் போட்டியிட்டனா். குருவானவா்கள், பெருமன்ற உறுப்பினா்கள், ஆசிரியா் பிரதிநிதிகள் என 441 போ் வாக்களித்தனா்.

இதில் எஸ்.டி.கே. அணி சாா்பில் போட்டியிட்ட குருவானவா்கள் மோசஸ் ஜெபராஜ் (288), டி.ஜி.ஏ. தாமஸ் (284), தேவராஜன் (250), நவராஜ் (237) வாக்குகள் பெற்று பேராயா் தோ்வுப் பட்டியலுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டனா். இதில் ஒருவரை பேராயராக சி.எஸ்.ஐ. சினாடு பேரவை தோ்வு செய்யவுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.