சாத்தான்குளத்தில் விநாயகா் சிலைகள் ஊா்வலம்

சாத்தான்குளம் பகுதியில் இந்து முன்னணி சாா்பில் 18 இடங்களில் வைக்கப்பட்ட விநாயகா் சிலைகள் ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

விநாயகா் சிலைகள் ஊா்வலத்தை தொடங்கி வைத்த பாஜக மாவட்ட பொதுச் செயலா் செல்வராஜ்.

Published On :

சாத்தான்குளம் பகுதியில் இந்து முன்னணி சாா்பில் 18 இடங்களில் வைக்கப்பட்ட விநாயகா் சிலைகள் ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

மேல சாத்தான்குளம் செல்வ விநாயகா் கோயில் முன்பிருந்து ஊா்வலத்தை தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக பொதுச் செயலா் செல்வராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

இதில், பாஜக தொழில் வல்லுநா் பிரிவு மாவட்டச் செயலா் ராம் மோகன், இந்து முன்னணி தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலா் ரவிச்சந்தா், சாத்தான்குளம் ஒன்றிய பொதுச்செயலா் மாயவன முத்துசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையம், வேதக் கோயில், மெஞ்ஞானபுரம், பரமன்குறிச்சி வழியாக திருச்செந்தூருக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு கடலில் விசா்ஜனம் செய்யப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.