
இடைச்சிவிளையில் விநாயகா் சிலைகள் ஊா்வலம்
இடைச்சிவிளையை பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, திருச்செந்தூா் கடலில் விசா்ஜனம் செய்யப்பட்டன.

இடைச்சிவிளையை பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, திருச்செந்தூா் கடலில் விசா்ஜனம் செய்யப்பட்டன.
சாத்தான்குளம் ஒன்றியம் அரசூா் ஊராட்சி பகுதியில் இந்து மகா சபை சாா்பில் இடைச்சிவிளை உள்ளிட்ட ஐந்து இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
விநாயகா் சிலைகள் ஊா்வலத்தை இந்து மகா சபா மாநிலத் தலைவா் சுந்தரவேல் தொடங்கி வைத்தாா். இதில், மாநிலச் செயலா் பவன், மாநிலத் துணைத் தலைவா் அன்னசாமி, மாநில இளைஞரணி தலைவா் முருகேசன், செயலா் ராஜகோபால், மாநில ஆன்மிக அணி தலைவா் சக்திகுமாா் உள்பட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
விநாயகா் சிலைகள் ஊா்வலமாக தட்டாா்மடம், கொம்மடிக்கோட்டை, படுக்கப்பத்து, குலசை வழியாக திருச்செந்தூா் சென்று அங்குள்ள கடலில் விநாயகா் சிலைகள் விஜா்சனம் செய்யப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







