கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கல்லூரி மாணவர்கள் ரத்த தானம்

கரூர், ஜன. 8: அவசர அறுவைச் சிகிச்சைக்காக கரூர் ம. குமாரசாமி பொறியியல் கல்லூரி மாணவர்கள் 10 பேர் சனிக்கிழமை ரத்த தானம் வழங்கினர்.    கரூர் அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை நடைபெற்ற அவசர அறுவைச் சிகிச்சை

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

கரூர், ஜன. 8: அவசர அறுவைச் சிகிச்சைக்காக கரூர் ம. குமாரசாமி பொறியியல் கல்லூரி மாணவர்கள் 10 பேர் சனிக்கிழமை ரத்த தானம் வழங்கினர்.

   கரூர் அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை நடைபெற்ற அவசர அறுவைச் சிகிச்சைக்காக "ஓ' பாசிட்டிவ், "பி' பாசிட்டிவ் வகை ரத்தம் தேவைப்பட்டது. இதுகுறித்து அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் ரத்த வங்கி கரூர் ம. குமாரசாமி பொறியியல் கல்லூரி நிர்வாகத்திடம் 10 யூனிட் ரத்தம் தேவையென கேட்டுக் கொண்டது.   இதையடுத்து, கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட தன்னார்வ மாணவர்கள் உடனடியாக ரத்த தானம் வழங்கினர். இந்த ரத்தம் அறுவைச் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டது.

   ரத்தம் வழங்கிய மாணவர்களையும், நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் பி. சுதாகரையும் கல்லூரித் தலைவர் ம. குமாரசாமி, செயலர் கு. ராமகிருஷ்ணன், முதல்வர் டி. வளவன், மேலாண்மைத் துறை இயக்குநர் ச. குப்புசாமி ஆகியோர் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.