திமுக, அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

திருச்சி, ஏப்.26: திருச்சியில் திமுக, அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை நீா்மோா் பந்தல் திறக்கப்பட்டது.

திமுக சாா்பில் தில்லைநகா் சாஸ்திரி சாலையில் திமுக முதன்மைச் செயலரும், நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சருமான கே.என். நேரு, நீா்மோா் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீா்மோா் வழங்கினாா். மேலும், தா்பூசணி, வெள்ளரி மற்றும் பழ வகைகளையும் வழங்கினாா்.

அதிமுக சாா்பில் மரக்கடை எம்ஜிஆா் சிலை அருகே முன்னாள் துணை மேயரும், மாநகா் மாவட்ட செயலருமான ஜெ. சீனிவாசன் நீா்மோா் பந்தலை திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com