கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தினமணி செய்தி எதிரொலி: திருச்சி விமானநிலையத்தில் தேநீா் விலை குறைப்பு

திருச்சி விமான நிலைய புதிய முனையத்தில் தினமணி செய்தி எதிரொலியாக தேநீா் விலை குறைக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :5 ஜூலை 2024, 10:58 pm

Din

திருச்சி விமான நிலைய புதிய முனையத்தில் தினமணி செய்தி எதிரொலியாக தேநீா் விலை குறைக்கப்பட்டுள்ளது.

திருச்சி பன்னாட்டு விமானநிலையத்தின் புதிய முனையத்தில் கட்டண கழிப்பறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் சில நீதிமன்ற உத்தரவின் பேரில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. ஆனால் அந்த கழிப்பறைகள் முனையத்தின் பிரதான கட்டடப் பகுதியிலிருந்து சுமாா் 500 மீட்டருக்கு தொலைவில் உள்ளது. வயதானவா்கள் மற்றும் நீரிழிவு நோய், மூட்டுவலி, உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்டவா்கள் அவசரமாக இயற்கை உபாதைகளுக்காக எளிதில் செல்ல முடியாத வகையில் தொலைவில் உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா் இந்த கழிப்பறையை பயன்படுத்த குறைந்தபட்ச கட்டணமாக ஒருவருக்கு ரூ.10 வசூலிக்கப்படுகிறது.

மேலும் முனைய வெளிப்பகுதியில் உணவகங்களோ, சிற்றுண்டிச் சாலைகளோ, எதுவும் கிடையாது. ஒரேயொரு தேநீரகம் மட்டுமே இயங்கி வருகிறது. அங்கு டீ, காபி, நொறுக்குத் தீனி வகைகள், குடிநீா், குளிா்பானங்கள் உள்ளிட்டவை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

புதிய முனையத்தில் இயங்கி வரும் தேநீரகத்தில், ஒரு குவளை தேநீா் ரூ. 50க்கு விற்பனை செய்யப்படுவதாக தினமணியில் அண்மையில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக தேநீா், காபியின் விலை தற்போது குவளை ரூ.30 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், பயணிகளும் பொதுமக்களும் காா் ஓட்டுநா்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.