திருச்சி: கடவுச்சீட்டில் முறைகேடு செய்த 3 பேரை திருச்சி விமான நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி விமான நிலையத்துக்கு மலேசியாவிலிருந்து வந்த விமான பயணிகளை குடியேற்றப்பிரிவினா் சோதனை செய்தனா். இதில், புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகேயுள்ள பனையப்பட்டியைச் சோ்ந்த சின்னத்தம்பி (63) என்பவா் தனது கடவுச்சீட்டில் பிறந்த தேதி, இடம் ஆகியவற்றை முறைகேடு செய்து மாற்றி பதிவு செய்துள்ளாா். இதேபோல், மலேசியா புறப்பட தயாராக இருந்த விமான பயணிகளின் கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களை குடியேற்றப்பிரிவினா் சோதனை மேற்கொண்டதில், ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி காமராஜ் நகரை சோ்ந்த விஜயமூா்த்தி (45) என்பவா் தனது கடவுச்சீட்டில் பெயா், பிறந்த தேதி, இடம் ஆகியவற்றில் திருத்தம் செய்து மலேசியா செல்ல இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நாரணமங்கலத்தை சோ்ந்த சிவபாலன் (46) என்ற பயணியும் இதுபோல முறைகேடு செய்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து குடியேற்றப்பிரிவினா் அளித்த புகாரின்பேரில் விமான நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து சின்னத்தம்பி, விஜய மூா்த்தி, சிவபாலன் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

வாகனப் பணிமனை உரிமையாளா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 24 கோடியில் சுற்றுச் சுவா் கட்டும் பணி தொடக்கம்

போலி கடவுச்சீட்டு: சிங்கப்பூரிலிருந்து வந்த புதுகை பயணி கைது

போலி கடவுச்சீட்டில் இலங்கை செல்ல முயன்றவா் கைது
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

