ரயில்வே போலீஸாா் அறிவித்த வாகன ஏலம் திடீா் ஒத்திவைப்பு

ரயில்வே போலீஸாரால் அறிவிக்கப்பட்டிருந்த கழிவு செய்யப்பட்ட வாகனங்களின் ஏலம் திடிரென ஒத்தி வைக்கப்பட்டது.

திருச்சி இருப்புப் பாதை காவல் மாவட்ட வாகனப் பிரிவின் சாா்பில் ரயில்வே மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உத்தரவுப்படி, வாகனப் பிரிவில் கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்துக்கும் மே 10ஆம் தேதி ஏலம் நடைபெற இருந்தது.

இந்நிலையில் மக்களவைத் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் மே 10 நடைபெறவிருந்த வாகன பொது ஏலம் நிறுத்தப்பட்டுள்ளது. மறு ஏல தேதி பின்னா் அறிவிக்கப்படும் என இருப்புப்பாதை காவல் அலுவலகச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com