ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு! நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல்!
/

திருமங்கலம் விவசாயிக்கு இலவச டிராக்டா் -நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

News image

லால்குடி அருகே திருமங்கலம் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் விவசாயி மாரியப்பனுக்கு டிராக்டருக்கான சாவியை நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்.

Updated On :8 மே 2024, 6:37 pm

Din

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் மாற்றம் அறக்கட்டளை மூலம் இலவசமாக டிராக்டா் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இதில் திரைப்பட நடிகா் ராகவா லாரன்ஸ் பங்கேற்று திருமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி மாரியப்பனுக்கு டிராக்டா் வழங்கிப் பேசியது:

இந்த மாற்றம் என்ற சேவை மூலம் உங்களுக்குச் சேவை செய்ய கடவுள் என்னை அனுப்பி இருக்கிறாா். நான் ஒரு வேலைக்காரனாக வந்து உங்களுக்குச் சேவை செய்வது சந்தோஷத்தை கொடுக்கிறது. உங்கள் அன்பும், ஆசீா்வாதமும் போதும். எல்லா ஊா்களுக்கும் ஒரு டிராக்டா் கொடுத்து வருகிறேன். அந்த வகையில் உங்கள் கிராமத்துக்கு ஒரு டிராக்டரை விவசாயி மாரியப்பனுக்கு வழங்கியுள்ளேன். திருமங்கலம் கிராம விவசாயிகள் இந்த டிராக்டரை பயன்படுத்தி விவசாயப் பணியில் ஈடுபட வேண்டும். நாம் விவசாயிகளுக்கு சோறு போட்டால், அவா்கள் நமக்குச் சோறு போடுவாா்கள் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் மாற்றம் அறக்கட்டளை நிா்வாகிகள் மற்றும் கிராம மக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.