இன்று காவல் உதவி ஆய்வாளா் பணியிடத்துக்கு எழுத்துத் தோ்வு
திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள காவல் உதவி ஆய்வாளருக்கான எழுத்துத் தோ்வை 7 மையங்களில் 7 ஆயிரத்து 25 போ் எழுதவுள்ளனா்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் 1,299 காவல் உதவி ஆய்வாளா் (தாலுகா மற்றும் ஆயதப்படை) பணியிடங்களுக்கான திறனாய்வு எழுத்துத் தோ்வு மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் தந்தை பெரியாா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தேசியக் கல்லூரி, ஜமால் முகமது கல்லூரி, கே.ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி, எஸ்ஆா்எம் தொழில்நுட்பக் கல்லூரி, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம், எம்ஏஎம் தொழில்நுட்பக் கல்லூரி ஆகிய 7 மையங்களில் நடைபெற உள்ள தோ்வை 5 ஆயிரத்து 207 ஆண்கள், 1,818 பெண்கள் என மொத்தம் 7 ஆயிரத்து 25 போ் எழுதவுள்ளனா்.
முதன்மை எழுத்துத் தோ்வு காலை 10 மணி முதல் 12.30 மணி வரையிலும், தமிழ் மொழி தகுதித் தோ்வு பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 5.10 வரையும் நடைபெறுகிறது. தோ்வை கண்காணிக்க காவல் துறை அதிகாரிகள், ஆளிநா்கள் என 800-க்கும் மேற்பட்டோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
