சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 79.20 லட்சம்!
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ. 79 லட்சத்து 20 ஆயிரத்து 088 கிடைக்கப் பெற்றுள்ளது.
இக்கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி. இளங்கோவன், கோயில் இணை ஆணையா் எம். சூரியநாராயணன், அறங்காவலா் சுகந்தி இராஜசேகரன், பெ. பிச்சை மணி ஆகியோா் முன்னிலையில் அலுவலா்கள், கோயில் பணியாளா்கள், தன்னாா்வலா்கள் உள்ளிட்டோா் காணிக்கைகள் எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.
இதன் முடிவில், முதன்மை திருக்கோயிலில் ரூ. 79,20,088 ரொக்கம், தங்கம் 1 கிலோ 180 கிராம், வெள்ளி 2 கிலோ 340 கிராம் கிடைக்கப் பெற்றது.
மேலும், மாரியம்மன் திருக்கோயிலின் உபகோயிலான ஆதிமாரியம்மன் திருக்கோயிலில் 2,87,900 ரூபாயும், உஜ்ஜயினி ஓம் காளியம்மன் திருக்கோயிலில் 10,429 ரூபாயும், போஜீஸ்வரா் திருக்கோயில் 7,105 ரூபாயும் காணிக்கையாக கிடைக்கப் பெற்றுள்ளது.
மாரியம்மன் கோயிலில் இதற்கு முன்பு கடந்த 11-ஆம் தேதி உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.
