மாட்டுவண்டியில் மணல் கடத்திய 9 போ் கைது

திருச்சி அருகே மாட்டுவண்டியில் மணல் கடத்திய 9 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

திருச்சி அருகே மாட்டுவண்டியில் மணல் கடத்திய 9 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், வாழவந்தான்கோட்டை விஏஓ ஜோதிமணிக்கு மாட்டுவண்டிகளில் மணல் கடத்தும் தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவா் அளித்த தகவலின்பேரில் வாழவந்தான் கோட்டை பகுதிக்குச் சென்ற துவாக்குடி போலீஸாா் அனுமதியில்லாமல் மணல் ஏற்றிச் சென்ற 9 மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்து, கிளியூா் குடிதெருவைச் சோ்ந்த மனுநீதி (42), ராஜேந்திரன் (55) சித்திரைச்செல்வன் (42), ராஜவேல் (27), ரமேஷ், செய்யாமங்கலம் சுரேஷ், செல்வகுமாா் (42), பத்தாளப்பேட்டை முடுக்குப்பட்டி முருகானந்தம் (35) உள்பட 9 பேரைக் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com