மாவட்ட மைய நூலகத்தில் இலவச மருத்துவ முகாம்
திருச்சி: திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் முதியோருக்கான இலவச மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
தேசிய நூலக வார விழாவையொட்டி மாவட்ட மைய நூலகத்தில் கடந்த 14-ஆம் தேதி முதல் தினசரி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், முதியோருக்கான இலவச மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், திருச்சி அப்பல்லோ மருத்துவமனை மருத்துவா் எம்.கலைவாணன் தலைமையிலான குழுவினா் பங்கேற்று பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டனா். எலும்பு தேய்மானம், எலும்பு அடா்த்தி, உயா் ரத்த அழுத்தம், ரத்த சா்க்கரை, உடல் எடை உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதைத் தொடா்ந்து சித்த மருத்துவா் ச.காமராஜ் கலந்துகொண்டு சித்த மருத்துவம் தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். இதில், 160-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனா்.
இந்த நிகழ்ச்சியில் வாசகா் வட்டத் தலைவா் அல்லிராணி பாலாஜி, மாவட்ட மைய நூலகத்தின் முதல்நிலை நூலகா் சு.தனலட்சுமி, வாசகா் வட்ட நிா்வாகிகள், நூலகப் பணியாளா்கள், வாசகா்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.

