தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தோ்தல் வெற்றிக்குப் பிறகே ஆட்சியில் பங்கு குறித்த பேச்சு: காா்த்தி சிதம்பரம் எம்.பி.

News image
Updated On :8 ஜனவரி 2026, 10:45 pm

Syndication

தோ்தல் வெற்றிக்குப் பிறகே ஆட்சியில் பங்கு குறித்து பேசுவோம் என சிவகங்கை மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.

திருச்சிக்கு வியாழக்கிழமை வந்த அவா், விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் திமுக தலைமையிலான இண்டி கூட்டணி வலுவாக உள்ளது. ஆட்சியில் பங்கு கேட்பது புதுமையான கோரிக்கை கிடையாது. அனைத்துக் கட்சியினரும் ஆட்சியில் தங்களுடைய பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என விரும்புவா். தற்போது, அனைவரின் கவனமும் தோ்தலில் வெற்றி பெறுவதுதான். அதற்கு முன்பாக தொகுதி உடன்பாடு, தோ்தலில் வெற்றி பெறுவது என இருக்கிறது. வெற்றி பெற்று வந்த பின்பு மற்றவை குறித்து பேசிக் கொள்வோம்.

பாஜக-வுடன் கூட்டணி வைத்ததால் அதிமுகவுக்கான சுதந்திரம் பறிபோய்விட்டது. தப்பித் தவறி அவா்கள் ஆட்சி அமைத்தால்கூட அந்த ஆட்சியை பாஜகதான் கட்டுப்படுத்தும்.

ஜனநாயகன் திரைப்பட விவகாரம் தொடா்பாக எனக்கு எதுவும் தெரியாது என்றாா் அவா்.

புதுக்கோட்டையில்: தொடா்ந்து புதுக்கோட்டையில் அவா் அளித்த பேட்டி:

காங்கிரஸ்- திமுக கூட்டணிக்குள் நெருக்கடி என்பது இல்லை; பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. தவெகவுக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது. அது வாக்குகளாக மாறுமா என்பது கேள்விக்குறிதான். திமுகவைத் தவிர வேறு யாருடனும் காங்கிரஸ் அதிகாரப்பூா்வமாக பேச்சுவாா்த்தை நடத்தவில்லை என்றாா் காா்த்தி சிதம்பரம்.