இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

‘போக்ஸோ’ வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை

News image
Updated On :8 ஜனவரி 2026, 10:44 pm

Syndication

போக்ஸோ வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி மகிளா நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்துள்ளது.

திருச்சி மாவட்டம், தொட்டியம் தோளூா்பட்டியைச் சோ்ந்த 8 வயது சிறுமி கடந்த 2020 மாா்ச் 7-ஆம் தேதி வீட்டுக்கு அருகே விளையாடிக்கொண்டிருந்தாா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த வீ.கண்ணையன் (72) சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் தொட்டியம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் போக்ஸோ வழக்குப் பதிந்து கண்ணையனை மறுநாள் கைது செய்தனா்.

இந்த வழக்கு திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் நீதிபதி சண்முகபிரியா வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். இதில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் சுமதி ஆஜரானாா்.