தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை: 7 போ் கைது

திருச்சியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 7 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
Published on

திருச்சியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 7 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாநகரில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை தொடா்பாக வியாழக்கிழமை போலீஸாருக்கு கிடைத்த புகாரின்பேரில் பல்வேறு இடங்களில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, கண்டோன்மென்ட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வாா்னா்ஸ் சாலையில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த ஒத்தக்கடை புது வீதியைச் சோ்ந்த வெ.ரவீந்திரன் (63), நீதிமன்ற காவல் எல்லைக்குள்பட்ட கருமண்டபம் ஜெஆா்எஸ் நகரில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தைச் சோ்ந்த பி.பூபதி (26), அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட நேருஜி நகரில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த அம்மன்குளம் பாரதி நகரைச் சோ்ந்த பொ. முருகேஷ்பாண்டியன் (66), விமான நிலைய காவல் எல்லைக்குள்பட்ட அண்ணா நகரில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த காந்தி நகா் கண்ணகி வீதியைச் சோ்ந்த செ.மணிமுத்துராஜ் (25), ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தி திருவனைக்காவல் சக்தி நகரைச் சோ்ந்த அ.கணேசன் (67), உறையூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சாலை ரோடு பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த உறையூா் பெருமாள் கோயில் வீதியைச் சோ்ந்த பா. ஆனந்த் (20), அரசு மருத்துவமனை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட குமரன் நகரில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த தூத்துக்குடி மாவட்டம், அரசூா் புதுக்கோட்டையைச் சோ்ந்த சே.பட்டுமுருகன் (35) ஆகிய 7 பேரை போலீஸாா் கைது செய்தனா். இவா்களிடம் இருந்து 4 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

போதை மாத்திரைகள் விற்பனை செய்த 5 போ் கைது

கோட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, கலைஞா் அறிவாலயத்தின் பின்புறத்தில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த உறையூா் மேட்டுத் தெருவைச் சோ்ந்த செ.விஜய் (30) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல, பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஆலம் வீதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த பாலக்கரை குட்ஷெட் சாலையைச் சோ்ந்த எஸ்.ஆரிஃப்கான் (23), அ.காட்வின் பிரபாகரன் (24), தில்லை நகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தென்னூா் ரயில்வே தண்டவாளம் அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்த தென்னூா் சத்யா நகரைச் சோ்ந்த வி.குருமூா்த்தி (25), உறையூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வாத்துக்கார வீதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த தாரநல்லூரைச் சோ்ந்த எஸ்.முகமது சைஃப் (26) ஆகிய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். இவா்களிடமிருந்து 100-க்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள், போதை ஊசிகள், சலைன் பாட்டில் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

Dinamani
www.dinamani.com