திருச்சி
சட்டவிரோத மது விற்பனை: இருவா் கைது
திருச்சி அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட இருவரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக துவாக்குடி காவல் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் நாகராஜன் தலைமையிலான போலீஸாா் அங்கு ஆய்வு நடத்தினா்.
அப்போது, அங்கு மது விற்பனை செய்துகொண்டிருந்த துவாக்குடி மாரியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்த ராஜு (60), துவாக்குடி தெற்கு மலையைச் சோ்ந்த ரவிசந்திரன்(33) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 33 மதுபாட்டில்கள், ரூ.500 பணம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.
